Friday, April 17, 2009

மட்டையை பெருமைப்படுத்திய மறத்தமிழச்சி

     எங்க கல்லூரி அரசினர் கல்லூரிங்கிறதால, எப்பவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தான். அதுக்காக தற்காலிக அடிப்படைல, பி.. முடிச்ச freshers சிலரை appoint பண்ணி இருப்பாங்க. அப்படி வர்றவங்க எல்லாம், பாடம் நடத்துறப்போ, அவங்க கல்லூரி சமயத்துல படிக்காம விட்டதை எல்லாம், சேர்த்து வளைச்சு எங்களுக்கு அறிவு அமுதம் ஊட்ட ரொம்ப தான் மெனக்கெடுவாங்க. ஆனா, பசங்க எல்லாம், அவங்க வகுப்புல தான், ரொம்ப குஷியா இருப்பானுங்க. (இருக்காதா, பின்ன !!!) . சும்மானாச்சும், பாடம் கவனிக்கிற மாதிரி ஆக்ட் விட்டு, ஏதாவது அறிவுப்பூர்வமா (?) சந்தேகம் எல்லாம் கேட்டு, " நாஙகளும் படிக்கிற பசங்க தான்" ன்னு நிலை நிறுத்திட்டு இருப்பானுங்க.

 

அப்படி ஒரு நாள்ல தான், நம்ம மட்டையோட திறமை வெளி உலகுக்கு தெரிஞ்சது. அது எப்படீன்னா ..........

 

மட்டை பொறந்து, வளர்ந்ததே சினிமா தியேட்டர்ல தான். அதனால அவனுக்கு கிட்டத்தட்ட எல்லா படத்துல வர்ற பாட்டும் அத்துப்படி. So, மட்டை இந்த மாதிரி வகுப்பை கவனிக்கிற மாதிரி படம் போடுற சமயத்துல, அவங்க பாடம் எடுத்து தாலாட்டுப் பாடுற மெட்டுல ஏதாவது ஒரு சினிமா பாட்டை, பேப்பர்ல எழுதி rounds விடுவான். பசங்க எல்லாம் அதை படிச்சுட்டு எங்களுக்குள்ள சிரிச்சுக்குவோம். (அந்த நாயி, இதே நினைப்புல தான் இப்போ பின்னூட்டம் போட சொன்னாக் கூட, ஏதாவது ஒரு பாட்டை பாடிட்டுப் போயிறுது .... )

 

அப்படி ஒரு நாள், கொஞ்ச நாள் முன்னாடி தான் வேலைக்கு சேர்ந்திருந்த ஒரு சேச்சி க்ளாஸ் எடுத்திட்டு இருந்தாங்க. அவங்க, Field Theory பாடத்தை அரைச்சு, திரிச்சு, மாவாக்கி, வேக வச்சு குழாப் புட்டா தர பெரு முயற்சி பண்ணிட்டு இருந்தப்போ......

 மட்டைக்கு மனசுக்குள்ள .... சிலுசிலுவென குளிரடிச்சு , மரம்கொத்திப் பறவை யெல்லாம் மரம் விட்டு மரம் பறக்க ஆரம்பிச்சிருச்சு.

 

பாடத்துக்கு நோட்ஸ் எடுக்குற பேப்பர்லயே " மலையாரக் கரையோரம் தமிழ் பாடும் குருவி, அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி ...." ன்னு அந்த பாட்ட முழுசா எழுதி circulation விட்டுட்டான்.

 

சேச்சி பாடம் எடுக்குற situation க்கு பாட்டு sync ஆகிருச்சு போல, பசங்க எல்லாம் பாடத்துக்கு background பாட்டை dubbing பாட ஆரம்பிச்சுட்டாங்க. வழக்கமா, field theory வகுப்புல சேட்டை பண்ணாம, சமத்தா தூங்குறது தான் நாங்க சேச்சிக்கு கொடுக்குற மரியாதை. ஆனா, மட்டையோட இந்த பாட்டால பசங்களுக்குள்ள லேசா சாரல் அடிக்க ஆரம்பிச்சிருச்சு .... கொஞ்சம் ஓவராத்தான் சிரிச்சுட்டானுக.

 

சேச்சி டென்ஷன் ஆகிட்டாங்க ..... வழக்கமா எல்லா புது ஆசிரியர்களும் சொல்ற் இத்துப் போன டயலாக் தான்... 

"இப்போ சிரிச்சதுக்கு reason சொல்லங்கில் ஞான் இனி க்ளாஸ் எடுக்க வராது !" ன்னு சொல்லிட்டே எங்க டெஸ்க் பக்கம் வந்தாங்க. மட்டைக்கு கொஞ்சம் தெனாவட்டு அதிகம்... சேச்சிக்கு தமிழ் படிக்க தெரியாதுங்குற தைரியத்துல அந்த பேப்பரை டெஸ்க் மேலயே வச்சு இருந்தான். சேச்சி பக்கத்துல வரவும், மட்டை பக்கத்துல உக்கார்ந்திருந்த வாய்க்கா ரொம்ப புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சு அந்த பேப்பரை எடுத்து மறைச்சு வைக்க முயற்சி பண்ணான். சேச்சிக்கு பொறி தட்டிடுச்சு. வேகமா அந்த பேப்பரை பிடிங்கிட்டு வகுப்பை விட்டுட்டு போயிட்டாங்க.

 

அது மட்டைக்கு கொஞ்சம் அசிங்கமா போச்சு. " ச்சே, சேச்சி கிட்ட இருந்த நல்ல இமேஜ், டேமேஜ் ஆகிருச்சே, இனிமே good morning எல்லாம் சொன்னா, சேச்சி சிரிக்க மாட்டாங்களே !" ன்னு ஒரே ஃபீலிங். அந்த கடுப்புல வாய்க்காவை கொஞ்சம் காய்ச்சி எடுத்துட்டு, அடுத்த க்ளாஸ்க்கு பாட்டெழுத ரெடி ஆகிட்டான்.

 

மறுநாள், காலைல கல்லூரிக்கு வந்தவுடனே, சேச்சி கூப்பிட்டு அனுப்பினாங்கன்னு சொல்லி, மட்டை staff room க்குப் போனான். பசங்க எல்லோருக்கும் உள்ளூர ஒரே சந்தோஷம், "மட்டை இன்னிக்கு சரியான டோஸ் வாங்க போறான் ! "

 

சுமார், ஒரு மணி நேரம் கழிச்சு, மட்டை   " மலையாரக் கரையோரம் தமிழ் பாடும் குருவி ........" ன்னு ரொம்ப உற்சாகமா பாடிட்டே வர்றான்.

வாய்க்கா ஜெர்க் ஆகி, "என்னடா மட்டை, சேச்சி ஒன்னும் சொல்லலியா, ஜாலியா வர்ற ?"

 

"ஏன் சொல்லாம, சேச்சிக்கு என்னோட கவிதைன்னா உயிர் தெரியுமா ?"

 

"அட நாயே, நீ எப்போ கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்ச?"

 

" அந்த கொடுமையை ஏன் கேக்குற ! சேச்சி அந்த சினிமா பாட்டை என்னோட கவிதைன்னு நினைச்சுருச்சு டா .... நிங்களொட கவிதை talent வல்லியதானு. ன்னு ஆரம்பிச்சு, ஒரு மணி நேரமா, திகட்டத் திகட்ட டிப்ஸ், அட்வைஸ், என்கரேஜ்மென்ட் ன்னு போட்டுத் தாக்கிருச்சுடா .... நானும் சளைக்காம இன்னும் நாலு, அஞ்சு பாட்ட கவிதையா மாத்திக்கொடுத்துட்டு வந்தேன்....  

ஆனா ஒன்னு டா, சேச்சியாவது சேர நாடு.... தமிழ் சினிமா பார்த்திருக்காதுன்னு விட்டுறலாம்.... சேச்சிக்கு அந்த பாட்ட, நம்ம வகுப்புல உள்ள யாரோ ஒரு மறத்தமிழச்சி தான்டா கவிதை ன்னு சொல்லி அர்த்தம் சொல்லி இருக்கா. அது மட்டும் யாருன்னு தெரிஞ்சா போதும், அந்த தெய்வத்துக்கு  கவிதையாவே காணிக்கை செலுத்துவேன் டா....

 

So, தம்பிகளா, நானும் இப்போ ஒரு கவிஞனா உருவாகிட்டேன்... இனிமே என்னை எல்லோரும் கவிஞர் மட்டை ன்னு தான் கூப்பிடனும்..... " ன்னு சொல்லி சவுண்டு விட்டுட்டே இருந்தான்...

 

"நாட்டுல கவிஞன் எல்லாம் இப்படி தான் உருவாகிறானுங்க போல இருக்கு , எல்லாம் நேரக் கொடுமை டா !"  ன்னு உண்மையான கவலையோட, கன்னத்துல கைய வச்சு உக்கார்ந்துட்டான்.

 

ஆமா, உண்மையிலேயே, கவிஞர்கள் இப்படி தானே உருவாகுறாங்க ?!?!?!?!?!?!?!?!

 

8 comments:

  1. மிக அருமை நண்பரே!
    மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. மிக்க நன்றி தமிழ் ப்ரியா

    ReplyDelete
  3. nice one...next eppa ezhutha poreenga?

    ReplyDelete
  4. அருமை நண்பா.. எந்த ஏரியா? அரவிந்த் தியேட்டர் பின்னாடியா?

    ReplyDelete
  5. //sathya said...
    nice one...next eppa ezhutha poreenga?//

    thanks , will try to write soon..

    //கார்த்திகைப் பாண்டியன் said...
    அருமை நண்பா.. எந்த ஏரியா? அரவிந்த் தியேட்டர் பின்னாடியா?//

    நன்றி கார்த்தி .... ஆமா அரவிந்த் தியேட்டர் பின்னால தான் .... :) நீங்க ?

    ReplyDelete
  6. நெறைய எழுதுங்கள் நண்பா.,

    ReplyDelete
  7. "இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் இவன் வாங்கிட்டான்...."

    ('கரகாட்டகாரன்' கவுண்டமணி ஸ்டைலில் வாசிக்கவும்)

    ReplyDelete