புதுக்குறள் - அதிகாரம் - டைடல் பார்க் - என் இனிய ஐ.டி. தமிழனுக்காக
ரெசியூமில் பொய்சொல்லி சேர்ந்தநல் வேலை
ரெசிசன்வந் தால்போய் விடும்.
எண்ணிமுடிடா அர்யர்செல் லாமில்லை - இல்லையே
மன்னார்அன் கோவிலும் வாய்ப்பு.
ஆப்டியூட் தாண்டிவந் துட்டியா மாப்ளஇரு
ஆங்கில ஜீடிதரும் ஆப்பு.
ராவெல்லாம் போன்பேச்சு ஏசியறை வேண்டாம்போ
கால்செண்டர் ஜோலிகாணல் நீர்.
ஆப்படிக்கும் டீம்லீட் அலறட்டும் சைக்ளோடும்
கேப்பில் தனிஆட்டோ ஓட்டு.
கோக்குடித்து தீர்த்திருப்பாய் கைக்காசை போடாடேய்
கேக்-பர்கர் எல்லாம் வேஸ்ட்.
சோப்போட்டே சாதிப்பார் மற்றெல்லாம் - கம்ப்யூட்டர்
கோடடித்தே செத்தொழி வார்.
அப்ரை சலதுனக்கே ஆப்படித்தால் டாட்டாபை
தப்பில்லை நீ-கம்பி நீட்டு.
ஆன்சைட்போய் ஆர்குட்டில் போட்டோ-போ டாவாழ்க்கை
பென்ச்சை தேய்த்தே கெடும்.
கல்விதூங்கா மற்கற்ற நற்பயன் கேம்பசில்
நல்லா-ப்ளே சாகிபென்ச்சில் தூங்கு.
(குறள் வெண்பா முயற்சி... தளைதட்டினால் சொல்லுங்க. உங்க கருத்தையும் தவறாமல் சொல்லுங்க)
உதவி :
http://ta.wikipedia.org/wiki/வெண்பா
http://wikipasanga.blogspot.com/2007/01/1.html
***
thirukural thanthathu thiruvalluvar,indha puthu kural thantha Bala valluvar ku en iniya vaazhthukkal.... :)
ReplyDeleteBalakural nallarukula? :)
தளை தட்டுதான்னெல்லாம் பாக்கத் தோணல.அருமை.தொடருங்கள்.
ReplyDelete//தளைதட்டினால் சொல்லுங்க//
ReplyDeleteஅதெல்லாம் எதுவும் நமக்கு தெரியாதுங்க....ஆனா "புது" குறள் ஒன்னு ஒன்னும் fresh ஆக உள்ளது....
நல்ல நையாண்டி !!!
-மதன்
அன்பின் பாலகுமார்
ReplyDeleteநல்ல முயற்சி - நல்வாழ்த்துகள்