Thursday, July 5, 2012

செவியிடை மனிதர்கள் - 3


வணக்கம், மன்னார் அன் கம்பெனிங்களா?

ஆமா, நீங்க?

நான் கவிஞர் காத்துவாயன் பேசுறேன். நம்ம பதிப்பகத்திலிருந்து ஒரு கவிதைத்தொகுப்பு போடலாம்னு இருக்கேன்.

தாராளமா பண்ணலாமே

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்க்கு குறைஞ்சது 300 லைக்ஸ் விழும், டிவிட்டர்ல மட்டும் 3452 ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நான் ஒன்னும் எழுதாட்டியும் அதை ரீட்வீட் பண்ணீட்டே இருப்பாங்க. பதிவுன்னா 2587 ஹிட்ஸ் வரும், பின்னூட்டம் சராசரியா 432 வரும், அலெஸ்கா ரேட்டிங்கல........

சரி சார், இதெல்லாம் எதுக்கு சொல்றீங்க?

இல்லை நான் ஒரு ‘பிரபல பதிவர்’ன்னு சொல்ல வந்தேன். எனக்கு புத்தகம் போடனும்னெல்லாம் விருப்பம் இல்ல, என் வாசகர் வட்டத்துல தீர்மானம் எடுத்துட்டாங்க. என்னால மீற முடியல.

வாசகர்கள் கேட்டா கண்டிப்பா பண்ணித் தான் சார் ஆகனும்.

சந்தோசம், தொகுப்புக்கு தலைப்பு “அகவெளியெங்கும் அலைந்து திரியும் கொடுநடை கதகளி”. சரி தானே?

சார், ரொம்ப கிளாசிக்கலா இருக்கே. கொஞ்சம் கமர்சியலைஸ் பண்ண முடியுமா?

இல்ல நண்பரே, எல்லாக் கவிதையிலயும் உள்ளொளி பொங்கும் ஞான அலை இருக்கும். அதான் வைப்ரேடிங்கா தலைப்பு வச்சேன், இல்லாட்டியும் பரவால்ல. “உள்ளே வெளியே விளையாட்டும், அஞ்சு காசு கமர்கட்டும்” ஓகே வா?

சூப்பர் சார். 

அதிருக்கட்டும் கவிதைத் தொகுப்புன்னா எவ்ளோ வரும்?

பக்காவா பண்ணுவோம் சார். ஒரு முப்பதாயிரம் வரும்.

சரி, நீங்க என்ன பண்றீங்க, என் பிளாக்ல இருக்க கவிதையெல்லாம் எடுத்து புக்கா போடுங்க. நீங்க ஒரு பதினஞ்சாயிரம் எடுத்துக்கங்க. மீதி பதினஞ்சாயிரம் எனக்கு எப்ப அனுப்பி வைக்கிறீங்க?

என்னது, அனுப்பி வைக்கவா ? சார், முப்பதாயிரம் நீங்க தந்தா கவிதைத்தொகுப்பு வரும்.

இல்லாட்டி...

வாய்ல நல்லா கெட்ட வார்த்தையா வரும். மொத்ல்ல வைய்யா ஃபோனை.

டொக்.


******

4 comments:

  1. இந்த உரையாடல் கற்பனையானதாகத் தெரியவில்லையே! யார் அந்த வியாபாரி?

    ReplyDelete
  2. //Karuppiah Subbiah said...

    இந்த உரையாடல் கற்பனையானதாகத் தெரியவில்லையே! யார் அந்த வியாபாரி?//

    கருப்பையா கேட்ட கேள்வியைப் பார்த்தால் அவர் அந்தக் கவிஞர் நீங்கதான்னு சொல்லாம சொல்லிட்டாரே!!
    அடக் கடவுளே........!

    ReplyDelete
  3. இப்பதிவுதான் ‘செவியிடை மனிதர்கள் - 3’ என்றால் முதலிரண்டு பதிவுகள் எங்கே ..? எங்கே ..? எங்கே ..?

    ReplyDelete
  4. கருப்பையா சார், தருமி ஐயா இருவருக்கும் நன்றி.

    செவியிடை மனிதர்கள் - 1 http://solaiazhagupuram.blogspot.in/2011/07/1.html

    செவியிடை மனிதர்கள் - 2 http://solaiazhagupuram.blogspot.in/2011/07/2.html

    @தருமி ஐயா, இன்னிக்கு பழைய பதிவு எல்லாத்தையும் படிச்சீங்க போல. நானெல்லாம் மொத்தமா 12 பின்னூட்டம் எல்லாம் ஒரு காலத்துலயும் பார்த்தது இல்லை, இன்னிக்கு உங்களால் கிடைத்தது. அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். :)

    ReplyDelete