Wednesday, September 26, 2012

செவியிடை மனிதர்கள் - 4


ஹலோ...

ஹலோ....

ஏய் பாலா, குமார் பேசுறேன்டா. எப்படிடா இருக்க?

டேய்... நல்லா இருக்கேன்டா. இப்ப எங்கடா இருக்க?

இங்க வந்து ஒரு வருசம் ஆச்சு. கேக்ரான் மேக்ரான்னு ஒரு கம்பெனி. அங்க தான் வேலை பார்க்குறேன்.

ஓ கேக்ரான் மேக்ரானா. அங்க என் ஃபிரண்டு ஒருத்தர் வொர்க் பண்றார் டா

அட, இங்க இருக்குறதே ஒரு இருபது பேர் தான். யாருடா அது ?

அவர் பெயர் ...................................................

ஓ அவனா, சரியான வெளங்காவெட்டிடா.. எப்பப்பாரு எதெயாவது தமிழ்ல டைப் பண்ணீட்டே கெடப்பான்டா

டேய், அவர் ஒரு பிரபல பதிவர் தெரியுமுல்ல

என்ன எழவோ, ஆமா ஒனக்கு எப்படிடா பழக்கம்

இல்ல நானும் பதிவெல்லாம் எழுதுவேன், அப்போ அறிமுகம்.

டேய், நீயும் வெளங்காவெட்டி கோஷ்ட்டியாடா, உங்களையெல்லாம் ^^@&^@#$@(&$@@)$@&@)_$@^@$%%@*@#_

ஹலோ, ஹலோ... டேய் இங்க சிக்னல் சரியா கெடைக்கல. நான் அப்புறமா கூப்பிட்றேன், பை.

******

#எத்தகையதொரு கொடுமையான சமூகச்சூழலில் எழுத்துப்பணியாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள் !!!

#புனைவுன்னு சொன்னா எதிர்கேள்வி கேட்கக்கூடாது.

4 comments:

  1. அன்பின் பாலா - நல்லதொரு இடுகை - எழுதும் பதுவுகளைப் படிக்கும் நெருங்கிய நண்பர்கள் இப்படித்தான் கேட்பார்கள் - மனம் தளர வேண்டாம் - தொடர்க பணியினை. நல்வாழ்த்துக்ள் - தென்திசை பாலா - நட்புடன்சீனா

    ReplyDelete
  2. ஹலோ! வெளங்காவெட்டி பாலாவா? .. ரெம்ப சந்தோசம்., நானும் வெளங்காவெட்டி தான்! ஹி..ஹி..ஹி...!!!

    ReplyDelete
  3. இதெல்லாம் "பொது வாழ்க்கையிலே" சாதரணமப்பா....!

    -மதன்

    ReplyDelete